- துணை தலைவர்
- அமைச்சர் பி.
- மூர்த்தி
- மதுரை
- திமுகா
- மதுரை வடக்கு மாவட்டம்
- அணி
- உதயநிதி ஸ்டாலின்
- அமைச்சர்
- பி. மூர்த்தி
மதுரை, டிச. 27:மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில், துணை முதல்வர், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து கிராமம் கிராமமாக சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை கிழக்கு தொகுதி, மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிகுளம் ஊராட்சி பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.
இதன்படி திருமால் நத்தம் மந்தை பகுதியில் நடைபெற்ற விழாவில் மாவட்டத் துணைச் செயலாளர் ஆ.வெங்கடேசன் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன், மாநில இலக்கிய அணி நேருபாண்டியன், மேற்கு ஒன்றிய சேர்மன் வீரராகவன், மாவட்ட துணை செயலாளர் ஆசைக்கண்ணன், செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கோதை மலைவீரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
The post துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி கிராமங்களில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார் appeared first on Dinakaran.