×

பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவுதல் பணி மும்முரம் ராக்கெட்டுடன் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நிறைவு: இஸ்ரோ தகவல்

சென்னை: பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவுதல் பணிகள் மும்முரமாக நடைபெறுவதாகவும், ராக்கெட்டுடன் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு சந்திரயான் 3, ஆதித்யா எல்1 ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி உலகை திரும்பி பார்க்க வைத்தது. 2035ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக ஸ்பேட்எக்ஸ் எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த ஸ்பேட்எக்ஸ் திட்டத்திற்கான ராக்கெட் ஏவுதல் வரும் டிச.30ம் தேதி இரவு 9.58 மணிக்கு நடைபெற உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் மூலம் தலா 220 கிலோ எடை கொண்ட இரண்டு சிறிய விண்கலன்கள் ஏவப்பட உள்ளன. இந்த திட்டத்தில் ராக்கெட்டுடன் செயற்கைக்கோளை பொருத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் ராக்கெட் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

The post பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவுதல் பணி மும்முரம் ராக்கெட்டுடன் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நிறைவு: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Chennai ,Indian Space Research Organisation ,Chandrayaan 3 ,Dinakaran ,
× RELATED பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வெற்றிகரமாக...