×

தமிழ்நாடு பார் கவுன்சில் வக்கீல் உத்தரகாண்ட் தலைமை நீதிபதியாக குகநாதன் நரேந்தர் பதவியேற்பு

டேராடூன்: ஆந்திரா உயர் நீதிமன்ற நீதிபதி குகநாதன் நரேந்தர். இவர் 1989 ஆகஸ்ட் 23ல் தமிழ்நாடு பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார். 2015 ஜனவரியில்இவர் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து 2023 அக்டோபர் 30ல் இவர் ஆந்திரா உயர் நீதிமன்ற நீதிபதியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார். தற்போது உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக குகநாதன் நரேந்தர் கடந்த டிச.23ல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். அவருக்கு உத்தரகாண்ட் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) குர்மித் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

The post தமிழ்நாடு பார் கவுன்சில் வக்கீல் உத்தரகாண்ட் தலைமை நீதிபதியாக குகநாதன் நரேந்தர் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Bar Council ,Kuganathan Narendra ,Uttarakhand Chief Justice ,Andhra Pradesh High Court ,Karnataka High Court ,Andhra Pradesh ,Chief Justice… ,Uttarakhand ,Chief Justice ,Dinakaran ,
× RELATED வழக்கறிஞர் மீது நடைபெறும் தாக்குதலை...