×

அண்ணா பல்கலைக்கழக பிரதான வாயில் சாலையை பயன்படுத்த வேண்டாம்: போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக பிரதான வாயில் சாலையை பயன்படுத்த வேண்டாம் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சின்ன மலையிலிருந்து சைதாப்பேட்டையை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்ப தங்கள் பயணத்தை திட்டமிட வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

The post அண்ணா பல்கலைக்கழக பிரதான வாயில் சாலையை பயன்படுத்த வேண்டாம்: போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Traffic Police ,AIADMK ,Chinnamalai ,Saidapet… ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்...