×

சுனாமி நினைவு தினம்; கன்னியாகுமரி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை!

கன்னியாகுமரி: சுனாமி நினைவு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியபுரம், வாவுத்துறை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நாட்டுப்படகு மீனவர்களும் செல்லவில்லை. குமரி கடற்கரை கிராமங்களை சுனாமி தாக்கி 1,000-க்கும் மேற்பட்டோர் இறந்ததன் 20ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

 

The post சுனாமி நினைவு தினம்; கன்னியாகுமரி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை! appeared first on Dinakaran.

Tags : Tsunami Memorial Day ,Kanyakumari ,Sinnamutam ,Arokipuram ,Vautura ,Dinakaran ,
× RELATED கல்பாக்கம் அருகே சுனாமி நினைவு தினம்...