×

டெல்லி முதல்வர் அடிசியை பொய் வழக்கில் கைது செய்ய சதி: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதில் இருந்து திசை திருப்ப பாஜ முயற்சிக்கிறது. இதற்காக டெல்லி முதல்வர் அடிசியை கைது செய்ய பாஜ சதி திட்டம் தீட்டி வருகிறது. இதற்காக டெல்லியில் அண்மையில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அப்போது, அடிசியை பொய் வழக்கில் கைது செய்ய ஒன்றிய புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்காக போக்குவரத்துத் துறையில் முறைகேடு நடந்துள்ளதாக அடிசி மீது ஒரு பொய் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனர். டெல்லியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தை நிறுத்த பாஜவினர் விரும்புகிறார்கள். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

The post டெல்லி முதல்வர் அடிசியை பொய் வழக்கில் கைது செய்ய சதி: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Adisi ,Arvind Kejriwal ,New Delhi ,Aam Aadmi Party ,National Coordinator ,Delhi Assembly ,BJP ,Adisi… ,
× RELATED டெல்லி பேரவை தேர்தலில் ஆம்ஆத்மி...