×

பெண் போலீசிடம் போதையில் சீண்டல் சிறப்பு எஸ்ஐ அதிரடி மாற்றம்

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தெற்கு காவல்நிலையத்தில் 54 வயதானவர், சிறப்பு எஸ்ஐ பணியாற்றி வருகிறார். ஏட்டுவாக இருந்த இவர் சமீபத்தில்தான் சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்றார். ராஜபாளையம் மலையடிப்பட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வரும் இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். காவல்நிலையத்தில் சமீபத்தில் இரவு பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ, பெண் காவலர் ஒருவரிடம் மது போதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்பி கண்ணன், சிறப்பு எஸ்ஐயை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இவர் மீது முதல்கட்டமாக துறைரீதியாக விசாரணை நடந்து வருகிறது.

The post பெண் போலீசிடம் போதையில் சீண்டல் சிறப்பு எஸ்ஐ அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Special SI ,Rajapalayam ,Rajapalayam South Police Station ,Virudhunagar district ,Malaiyadipatti police station ,Dinakaran ,
× RELATED பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறல் சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட்