×

ஆலங்குளம் அம்மன் கோயிலில் திருட முயன்றவரை பிடித்த பொதுமக்கள்

ஆலங்குளம், டிச.25: ஆலங்குளம் நத்தம் மாரியம்மன் கோயிலில் பித்தளை பாத்திரங்களை திருட முயன்றவரை சுற்றிவளைத்து பிடித்த பொதுமக்கள் நன்றாக கவனித்து போலீசில் ஒப்படைத்தனர்.நெல்லை அடுத்த முக்கூடல் அருகேயுள்ள செங்குளத்தைச் சேர்ந்தவர் முருகன் (45). ஆலங்குளம் பகுதியில் வீட்டின் வெளியே நிறுத்தப்படும் சைக்கிள்களை திருடி விற்று வருவதாக கூறப்படும் இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு ஆலங்குளம் பஸ்நிலையம் அருகேயுள்ள நத்தம் மாரியம்மன் கோயிலில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பித்தளை பொருட்களை திருட முயன்றார். அப்போது அங்கு வந்த ஒருவர், இதை கண்டதும் திருடன் திருடன் என கூச்சலிட்டார். இதை கேட்டு விரைந்துவந்த அக்கம்பக்கத்தினர், முருகனை பிடித்து நன்றாக கவனித்த பிறகு போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து முருகனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆலங்குளம் அம்மன் கோயிலில் திருட முயன்றவரை பிடித்த பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Alangulam Amman ,Alankulam ,Natham Maryamman ,Murugan ,Alangulam ,Alangulam Amman Temple ,
× RELATED டூவீலர்கள் திருடிய வாலிபர் கைது