×

அரசு பேருந்தில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது

திருத்தணி: சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பொன்பாடி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனைநடத்தினர். ஆந்திராவிலிருந்து திருத்தணி நோக்கி வந்த அரசு பேருந்தில் பேருந்து சீட்டுக்கு அடியில் பையில் மறைத்து வைத்திருந்த 6 கிலோ 150 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலையை பறிமுதல் செய்தனர். கடத்தி வந்த வாலிபரை திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரித்ததில், ஆந்திர மாநிலம் நகரியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் அருள் (32) என தெரிந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post அரசு பேருந்தில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruttani ,Ponpadi ,Chennai-Tirupati National Highway ,Andhra Pradesh ,Tiruttani… ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் திருப்படித் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்