×

அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 

வருசநாடு, டிச.25: மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு பொறுப்பாளர்கள் ரவி, குமரன் மற்றும் தேனி மாவட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசு அறிவித்த சத்துணவு பணியாளர் காலியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்பும் அரசாணையை ரத்து செய்யக்கோரி வலியுறுத்தப்பட்டது.

 

The post அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Anganwadi workers ,Varusanadu ,Mayiladumbarai ,Panchayat Union ,Nutritional Food and Anganwadi Workers Association ,Mayiladumbarai Panchayat Union ,Nutritional Food… ,Anganwadi Workers Protest ,Dinakaran ,
× RELATED கடமலை -மயிலை ஒன்றியத்தில் மானாவாரி நிலங்களில் பருத்தி சாகுபடி தீவிரம்