×

தாலுகா அலுவலகம் முற்றுகை

 

சிவகங்கை, டிச.25: இளையான்குடி தாலுகா அலுவலகத்தை அரணையூர் கிராமத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  இளையான்குடி அருகே அரணையூர் கிராமத்தில் முழுமையாக விவசாயம் மட்டுமே தொழிலாக உள்ளது. அரணையூர் கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து நீர் வரத்து கால்வாய் உள்ளது. இந்த வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டதால் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டதில், ஆக்கிரமிப்பை அகற்றி கண்மாய்க்கு நீர் கொண்டு செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அரணையூர் கிராமத்தினர் இளையான்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் வருவாய்த்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

The post தாலுகா அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Taluka ,Sivaganga ,Aranaiyur ,Ilayankudi Taluka ,Ilayankudi ,Vaigai river ,Kanmai ,Dinakaran ,
× RELATED பண்ணைக்குட்டைகள் அமைக்க வலியுறுத்தல்