×

பெரியார் பஸ் ஸ்டாண்டில் செல்போன் திருடிய பெண் கைது

மதுரை, டிச. 25: மதுரை திருநகர் மீனாட்சி காலனி சீனிவாச நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் துர்கா(40). இவர் உடல்நிலை சரியில்லாத தன் பிள்ளைகளை கோரிப்பாளையம் பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு மந்திரித்துக் கொண்டு சொந்த ஊர் திரும்புவதற்காக பெரியார் பஸ் நிலையம் வந்துள்ளார்.

அவர் 2வது பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்தபோது அவர் கூடையில் வைத்திருந்த ஐபோனை திருடிக்கொண்டு அருகில் நின்ற பெண் ஓடியுள்ளார். அவர் கூச்சலிட்டு சத்தம் போடவே, அருகில் இருந்த பொதுமக்கள் செல்போன் திருடி கொண்டு ஓடிய பெண்ணை விரட்டி பிடித்து, திடீர் நகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, அவர் விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் எம்ஜிஆர் நகரை சேர்ந்த அழகம்மாள்(54) எனத்தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பெரியார் பஸ் ஸ்டாண்டில் செல்போன் திருடிய பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Periyar ,Madurai ,Durga ,Third Street, Meenakshi Colony ,Srinivasa Nagar ,Thirunagar, Madurai ,Koripalayam mosque ,
× RELATED தந்தை பெரியாரின் நினைவு நாளை...