- திண்டுக்கல்
- ஜனாதிபதி
- இந்தியா
- திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி
- யூனியன்
- உள்துறை அமைச்சர்
- அமித் ஷா
- டாக்டர்
- அம்பேத்கர்
- தின மலர்
திண்டுக்கல், டிச. 25: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய ஜனாதிபதிக்கு கடிதம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக காங்கிரசார் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளித்தனர். இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் மச்சகாளை, ரசூல் மைதீன், கோபால், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிவண்ணன், அம்சவல்லி, வட்டார பொறுப்பாளர் சவுந்தர்ராஜன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் கனவாய் பீர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post கலெக்டரிடம் மனு அளித்த காங்கிரசார் appeared first on Dinakaran.