×

பெரியார் நினைவு நாள் திமுகவினர் மரியாதை

 

கோவை, டிச. 25: தந்தை பெரியாரின் 51-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோவையில் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்தினர்.  தொடர்ந்து வடகோவையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். ஆர்.எஸ்.புரம் பூபாலன் தந்தை பெரியாரின் கொள்கைகள் அடங்கிய துண்டு பிரசுத்தை அனைவருக்கும் வழங்கினார்.

இதில், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், மாநகர மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், தீர்மான குழு இணை செயலாளர் பி.நாச்சிமுத்து, தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் தமிழ்மறை, தலைமை கழக பேச்சாளர் சம்பத், பொதுக்குழு உறுப்பினர் மு.மா.ச முருகன், வக்கீல் மகுடபதி மணிகண்டன், கார்த்திகேயன், பகுதி செயலாளர் சேதுராமன் உள்ளிட்டோர். மற்றும் பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பெரியார் நினைவு நாள் திமுகவினர் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Periyar Memorial Day ,Commander ,COVE ,Periyar ,Secretary of State ,Goa Municipal District ,Peryaar Thiruvuruva ,Goa ,Karthik ,Dhimugvinar ,Vadakoa ,Day ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் இன்று பெரியார்...