×

ஒடிசா, ஆந்திராவில் இருந்து கடத்திய 13 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

அண்ணாநகர்: ஒடிசாவில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்த ரயிலில் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து பேருந்து மூலம் 4 கிலோ கஞ்சா கடத்தி வந்து, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பண்ருட்டி செல்ல முயன்ற பண்ருட்டி பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி தமிழரசன் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அம்பத்தூர்: கொரட்டூர் இளங்கோ நகர் பூங்கா அருகே கஞ்சா விற்பதாக, போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அங்கு சென்று, பையுடன் இருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்த போது, கஞ்சா இருந்தது. விசாரணையில், ஒடிசா மாநிலம் சுமண்டல் பகுதியை சேர்ந்த கோரங்கா டோரா (40) என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், கொரட்டூர், பட்டரவாக்கம் ஆகிய பகுதிகளில் பணிபுரியும் வடமாநில வாலிபர்களுக்கு விற்று வந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post ஒடிசா, ஆந்திராவில் இருந்து கடத்திய 13 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Odisha, Andhra Pradesh ,Annanagar ,Karthik ,Tiruvallur district ,Chennai ,Odisha ,Andhra Pradesh… ,Dinakaran ,
× RELATED ஒடிசா, ஆந்திராவில் இருந்து கஞ்சா...