×

ஆல்வின், சியோன் குழும பள்ளிகள் சார்பில் கிறிஸ்துமஸ் விழா

தாம்பரம்: ஆல்வின் மற்றும் சியோன் குழும பள்ளிகள் சார்பில், கிறிஸ்துமஸ் விழா தாம்பரம் அடுத்த மப்பேட்டில் உள்ள சீயோன் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை ஆல்வின் மற்றும் சீயோன் ஆசிரியர்கள் இணைந்து பாடல்கள், நடனம், நாடகத்தின் மூலம் வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை பேராயத்தின் ஆயர் பால் பிரான்சிஸ் கலந்து கொண்டு கிறிஸ்து பிறப்பின் செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்.

விழாவில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் கிறிஸ்துவின் பிறப்பு பரிசு மற்றும் ஏழைகளுக்கு இரங்குதலும் என்பதனை சியோன் மற்றும் ஆல்வின் குழும பள்ளிகளின் தலைவர் என்.விஜயன் பள்ளியில் பணிபுரியும் உதவி பணியாளர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு வழங்கினார். அதனை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

The post ஆல்வின், சியோன் குழும பள்ளிகள் சார்பில் கிறிஸ்துமஸ் விழா appeared first on Dinakaran.

Tags : Christmas ,Alvin ,Zion Group of Schools ,Tambaram ,Alvin and ,Zion ,International ,School ,Muppet, Tambaram ,Christ ,
× RELATED நாடு முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!!