×

இரண்டு நிறுவனங்கள் என்னை ஏமாற்றி விட்டன நானும் சீட்டு நிறுவன மோசடியில் பணத்தை இழந்தேன்: ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி வேதனை

புவனேஷ்வர்: “நானும் சீட்டு நிறுவன மோசடியால் ஏமாற்றப்பட்டேன்” என ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி வேதனை தெரிவித்துள்ளார். ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் மாநில அளவிலான தேசிய நுகர்வோர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “சீட்டு நிறுவன மோசடிகளால் நானும் பாதிக்கப்பட்டேன். கடந்த 1990 மற்றும் 2020ம் ஆண்டுகளில் இரண்டு நிறுவனங்கள் என்னை ஏமாற்றி விட்டன. பணத்தை மீட்பதற்கான செயல்முறை மிகவும் சிக்கலானது என்பதால் என்னால் பணத்தை மீட்க முடியவில்லை.

இரண்டு பொன்சி நிறுவன முகவர்களின் இனிமையான பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு சில திட்டங்களில் முதலீடு செய்ய பணத்தை ஏற்பாடு செய்தேன். ஆனால் முதிர்வு காலம் வந்தபோது பணம் முதலீடு செய்த நிறுவனங்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை” என வேதனையுடன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மோகன் சரண் மாஜி, “நுகர்வோர் ஏமாற்றப்படுவதை தடுக்க ஒன்றிய அரசு பல்வேறு விதிகளை வகுத்து பலப்படுத்தி உள்ளதால் தற்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.பொன்சி மோசடி நிறுவனங்கள் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று இவ்வாறு தெரிவித்தார்.

The post இரண்டு நிறுவனங்கள் என்னை ஏமாற்றி விட்டன நானும் சீட்டு நிறுவன மோசடியில் பணத்தை இழந்தேன்: ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி வேதனை appeared first on Dinakaran.

Tags : Former ,Odisha ,Chief Minister ,Mohan Charan ,Bhubaneswar ,National Consumer Day ,Mohan Charan… ,
× RELATED முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு;...