×

இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான மனுக்கள்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பெற்றார்

திருவள்ளூர்: காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 3600க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வீடு கட்டி 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்போருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழ்நாடு அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான மனுக்கள் பெறும் முகாம் திருவள்ளூர் – காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள ரவுண்டானா பகுதியில் நடந்தது. வட்டாட்சியர் செ.வாசுதேவன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நல சங்க தலைவர் சுரேஷ், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் அருள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு முகாமில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு மனுக்களை பெற்றார். இதில் ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.ஜெயசீலன், பொதுக்குழு உறுப்பினர் எத்திராஜ், ஒன்றிய குழு துணைத் தலைவர் பர்க்கத்துல்லா கான், சவுந்தரராஜன், சுகுமார், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பாலு, புஜ்ஜி ராஜி, ரகுபதி, கருணாகரன், சீனிவாசன், நாகேஷ், தசரத நாயுடு, வி.ஹரி பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் ஏராளமானோர் தங்களது வீட்டுமனைக்கான அனைத்து ஆவணங்களையும் காண்பித்து மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கினர். முகாமில் மனுக்களை வழங்காதவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் பெற்று பூர்த்தி செய்து வழங்கினால் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் வாசுதேவன் தெரிவித்தார்.

The post இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான மனுக்கள்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பெற்றார் appeared first on Dinakaran.

Tags : A. Krishnasamy ,MLA ,Tiruvallur ,Kakkalur Housing Board ,Housing Board ,
× RELATED ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய...