கோவை: கோவையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவரின் வீட்டுக்குள் இருந்த ரூ.2.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் சோதனையில் 2 லட்சம் ரூபாய் அளவிற்கு பழைய செல்லாத நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை கருமத்தம்பட்டி, செந்தில் நகரைச் சேர்ந்த நாகராஜ், கேரளாவில் லாட்டரி விற்பனை கடையில் பணியாற்றி வருகிறார். லாட்டரி சீட்டுகளை கருமத்தம்பட்டி பகுதியிலும் நாகராஜ் விற்பனை செய்து வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சட்டவிரோதமாக கேரள லாட்டரி விற்றதாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் நாகராஜ் மீது 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கேரள லாட்டரி விற்பனை தொடர்பாக மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவுப்படி கருமத்தம்பட்டியில் நாகராஜ் வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது நாகராஜ் வீட்டில் இருந்து ரூ.2.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நாகராஜிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
The post கோவையில் லாட்டரி விற்பவர் வீட்டில் ரூ.2.25 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.