×

காட்டு யானை தாக்கி பெண் பலி: சடலத்துடன் கிராம மக்கள் போராட்டம்


சத்தியமங்கலம்: பவானிசாகர் வனப்பகுதியையொட்டி நீலகிரி மாவட்ட எல்லையில் மாயாற்றின் கரையில் தெங்குமரஹாடா கிராமம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டி கிராமம் உள்ளதால் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை தெங்குமரஹாடா கிராமத்துக்குள் புகுந்தது. அப்போது, லட்சுமி (56) என்ற பெண் பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்ற போது கூட்டுறவு சங்கம் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, ஊருக்குள் புகும் காட்டு யானைகளை தடுக்க தவறிய வனத்துறையை கண்டித்து தெங்குமரஹாடா வன கிராம மக்கள் யானை தாக்கி உயிரிழந்த லட்சுமியின் சடலத்தை சாலையின் நடுவே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post காட்டு யானை தாக்கி பெண் பலி: சடலத்துடன் கிராம மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Tengumarahada ,Maya river ,Nilgiris district ,Bhavanisagar forest ,Dinakaran ,
× RELATED காலாவதியான அடுக்கு மாடி...