×

யானை தந்தத்தில் செய்த விநாயகர் சிலை பறிமுதல்: விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது


கிருஷ்ணகிரி: ஊத்தங்கரையில் யானை தந்தத்தில் விநாயகர் சிலை வடிவமைத்து, விற்பனைக்கு வைத்திருந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானை தந்தத்தில் விநாயகர் சிலை வடிவமைத்து விற்பனை செய்யப்படுவதாக, சென்னை மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அண்ணாநகர் 2வது தெருவில் வசிக்கும் ரஞ்சித் (41) என்பவரது வீட்டில், கிருஷ்ணகிரி வனச்சரகர் முனியப்பன் தலைமையிலான வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, யானை தந்தத்தில் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், ரஞ்சித்தை கைது செய்தனர்.

The post யானை தந்தத்தில் செய்த விநாயகர் சிலை பறிமுதல்: விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Ganesha ,Uthankarai ,Central Wildlife Crime Prevention Unit ,Chennai ,
× RELATED மது விற்ற பெண், தொழிலாளி கைது