×

இஞ்சி பிரெட் கேக்

தேவையானவை:

மைதா – 150 கிராம்,
உப்பு – ¼ டீஸ்பூன்,
சர்க்கரை – 100 கிராம்,
வெண்ணெய் – 60 கிராம்,
பால் – 100 மிலிலிட்டர்,
சமையல் சோடா – ½ டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்,
இஞ்சி (சுக்கு) தூள் – ½ டீஸ்பூன்,
கோல்டன் சிரப் – 30 கிராம்.

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதாவை சலித்துக் கொள்ளவும். அத்துடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா, சுக்குப் பொடி ஆகிய மூன்றையும் சலித்துச் சேர்க்கவும். 100 கிராம் சர்க்கரையை தண்ணீர் இல்லாத சட்டியில் இட்டுக் கிளறி நன்கு புகை வரும் போது சர்க்கரையில் ¼ பங்கு தண்ணீரை அதில் ஊற்றினால் கிடைப்பது கோல்டன் சிரப். இதனுடன் ப்ளம்ஸ், முந்திரி நறுக்கிப் போடவும். வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து அது நன்கு உறுகியதும் அதில் பாலை விடவும். பின் சர்க்கரைப் போடவும். அது சற்று ஆறிய பிறகு கோல்டன் சிரப் விடவும். பிறகு மைதாக் கலவையை அதில் கொட்டி நன்கு கலக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி பேக் பண்ணவும். ஓவனில் சுமார் 25 நிமிடம் வைத்து இறக்கவும்.

The post இஞ்சி பிரெட் கேக் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பனிப்பொழிவு சீசனில் சிறுவர்களை...