துபாய்: சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடியதால் மூலம் ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இதே போல் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலிலும் ஸ்மிருதி 2வது இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ளதால் இரு வடிவங்களிலும் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.
ஸ்மிருதி மந்தனா 739 ரேட்டிங் புள்ளிகளுடன் ஒருநாள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலம் முதலிடத்தில் இருக்கும் லாரா வால்வார்டை (773) ஸ்மிருதியால் பின்னுக்குத் தள்ள முடியும்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஸ்மிருதி 62 மற்றும் 77 (47) ரன்கள் எடுத்தார். அதன்பின், மூன்றாவது போட்டியிலும் அரைசதம் அடித்தார். முதல் ஒருநாள் போட்டியில் 102 பந்துகளில் 91 ரன்கள் எடுத்துள்ளார். அவர் தனது கடைசி ஐந்து சர்வதேச இன்னிங்ஸ்களில் 50+ ரன்கள் எடுத்து அசத்தி வருகிறார்.
டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் மூலம் 753 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு ஸ்மிருதி மந்தனா முன்னேறியுள்ளார். 757 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி முதலிடத்தில் உள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
The post ஐசிசி டி20 மற்றும் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா appeared first on Dinakaran.