×

தமிழக மீனவர்கள் 16 பேர் கைது: தொடர் கைது நடவடிக்கையால் மீனவர்கள் இடையே அதிர்ச்சி!

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் 16 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 மீனவர்களுடன் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலால் தமிழக மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். இது போன்ற கைது நடவடிக்கைகளை தடுக்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இச்சம்பம் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தமிழக மீனவர்கள் 16 பேர் தற்போதும் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், 2 விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 16 பேரையும் கைது செய்துள்ளார். அதனுடன் அவர்களின் 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகள் மீனவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வர மீனவர்களை உடனடியாக விடுவிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

The post தமிழக மீனவர்கள் 16 பேர் கைது: தொடர் கைது நடவடிக்கையால் மீனவர்கள் இடையே அதிர்ச்சி! appeared first on Dinakaran.

Tags : Nadu ,Rameswaram ,Sri Lankan Navy ,Neduntheevu.… ,
× RELATED நடுக்கடலில் 2 விசைப்படகுகளுடன்...