×

தேசிய கணித தினம் கொண்டாட்டம்

 

காரைக்குடி, டிச.24: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கணிதத்துறை மற்றும் ராமனுஜன் உயர்கணித மையம் சார்பில், தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது. கணிதவியல் துறை தலைவர் பேராசிரியர் அன்பழகன் வரவேற்றார். துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ஜி.ரவி துவக்கிவைத்து பேசுகையில், உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் அங்கு கணிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மிகச் சிறந்த விஞ்ஞானியாக இருந்தாலும் அவர்களுக்கு கணிதத்தின் பயன்பாடு அவசியம்.

இந்தியர்கள் கணிதத்தில் என்றும் சிறந்தவர்களாக உள்ளனர். எந்தவொரு அறிவியல் பாடத்திற்கும் கணிதத்தின் பயன்பாடு மிக அவசியம். பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு கணிதத்தின் முக்கியத்துவத்தை பேராசிரியர்கள் உணர்த்த வேண்டும் என்றார். இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் கணிதத்துறை பேராசிரியர் நடராஜன், தொலை நிலைக்கல்வி இயக்கக இயக்குநர் கண்ணபிரான் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராமானுஜன் உயர் கணித மையத்தின் உதவி பேராசிரியர் ராஜா நன்றி கூறினார்.

The post தேசிய கணித தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : National Mathematics Day ,Karaikudi ,Department of Mathematics ,Ramanujan Centre for Advanced Mathematics ,Karaikudi Alagappa University ,Anbazhagan ,Head ,Vice-Chancellor ,Dr. ,G. Ravi ,Dinakaran ,
× RELATED நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாதது ஏன்? : நீதிபதி