×

சபரிமலை சீசன் காரணமாக மீனாட்சியம்மன் கோயிலில் அலைமோதும் கூட்டம்

மதுரை, டிச. 24: சபரிமலை சீசன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்ததாலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இதேபோல் வெளி நாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தற்போது வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் மேல்மருவத்தூர் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தால் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அம்மன் மற்றும் சுவாமியை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து விட்டுச் சென்றனர். சித்திரை வீதியில் உள்ள கடைகள் மற்றும் நகை, ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கோயில் மற்றும் சுற்றுப்பகுதிகள் முழுவதும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

The post சபரிமலை சீசன் காரணமாக மீனாட்சியம்மன் கோயிலில் அலைமோதும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Meenakshi Amman temple ,Madurai ,Ayyappa ,Madurai Meenakshi Amman temple ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பர விழா கோலாகலம்