×

இயற்கை மருத்துவ முகாம்

கோவில்பட்டி, டிச. 24: கோவில்பட்டி அரசு தலைமை மாவட்ட மருத்துவமனை இயற்கை மருத்துவத்துறை சார்பில் கோவில்பட்டி நகராட்சி பொது சுகாதாரப் பணி டெங்கு தடுப்பு களப் பணியாளர்களுக்கான இயற்கை மருத்துவ விழிப்புணர்வு முகாம், நகராட்சி பழைய அலுவலக கட்டிடத்தில் நடந்தது. மருத்துவர் திருமுருகன்,மழை காலங்களில் ஏற்படும் நோய்கள், தடுக்கும் இயற்கை மருத்துவம் குறித்து பேசினார். இதில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கண் குவளை, வலி நிவாரண ஆயில், கை கால் இடுப்பு வலி மூலிகை மாஸ்கரோல் வழங்கப்பட்டது. இயற்கை மருத்துவத்தில் கண் குவளை மூலம் கண்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாத்தல் குறித்து செயல்விளக்கம் பயிற்சி அளிக்கப்பட்டது.

The post இயற்கை மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Kovilpatti Municipality Public Health Service Dengue Prevention Field Workers ,Kovilpatti Government Head District Hospital Naturopathy Department ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கிய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்