- அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி
- நாகர்கோவில்
- கிறிஸ்துமஸ்
- முதல்வர்
- கிருஷ்ணசுவாமி
- துணை
- சுனி
- ஜோசப் ஜவஹர்
- தருண் சுரத்…
நாகர்கோவில், டிச.24: அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. தாளாளர் கிருஷ்ணசுவாமி தலைமை வகித்து பேசினார். துணைத்தாளாளர் சுனி கிறிஸ்துமஸ் குடிலை திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவஹர் கிறிஸ்துமஸ் பற்றி பேசினார். இயக்குனர் தருண் சுரத் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் மாணவிகள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து நடனம் ஆடினார். பேராசிரியர்களும் மாணவிகளும் கிறிஸ்து பிறப்பு பாடல் பாடினர். இறுதியில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். விழாவில் கல்லூரி டீன் வின்ஸ்லி கலந்து கொண்டார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மேரி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
The post அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி appeared first on Dinakaran.