நெல்லை: மருத்துவ கழிவுகளை கேரளா திருப்பி அள்ளிச் சென்றதாக சரித்திரம் கிடையாது, இப்போதுதான் நடந்துள்ளது. இனி கொண்டு வந்து கொட்டினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு எச்சரித்துள்ளார். நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான நெல் சாகுபடிக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் நேற்று தண்ணீர் திறந்து வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி: கேரள மருத்துவக் கழிவுகள் மீண்டும் அள்ளிச் செல்லப்பட்டுள்ளது.
இதற்காக கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காது. இனி கொண்டு வர மாட்டார்கள். திருப்பி கழிவுகளை அள்ளிச் சென்றதாக சரித்திரம் கிடையாது. இனி கொண்டு வந்தால் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றிய அரசின் அனுமதி பெற்று மாநில அரசின் திட்டங்களுக்காக கடன் வாங்குகிறோம்.
ஒரு நிதியை நினைத்த உடன் திட்டங்களுக்கு எடுத்து செலவு செய்ய முடியாது. அண்ணாமலை சொல்கிறார், அவர் எஸ்பியாக இருந்தவர். வாங்கும் பணத்தை அந்த திட்டத்திற்கு செலவு செய்ய முடியாமல் வேறு எந்த திட்டத்திற்கு செலவு செய்ய முடியும். அவர் சொல்வது குறித்து அவரிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும். மணிமுத்தாறு – பாபநாசம் அணைகள் இணைப்பது குறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
The post கேரளா திருப்பி அள்ளிச்சென்றதாக சரித்திரம் கிடையாது மருத்துவ கழிவு கொண்டுவந்து கொட்டினால் கைது நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை appeared first on Dinakaran.