×

அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பேசினால் 29 நாட்கள் சஸ்பெண்ட்: தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

சென்னை: அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் போக்குவரத்து துறைக்கு சொந்தமான சென்னை, சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட 8 போக்குவரத்து கழகங்கள் மூலமாக தினசரி 20,260 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஓட்டுநர், நடத்துநர் உட்பட 19,161 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இதில் நாளொன்றுக்கு ஏறத்தாழ 1.76 கோடி மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில், பாதுகாப்பான பயணங்களை பொதுமக்கள் எப்போதுமே மேற்கொள்ள வேண்டும் என்பதில், தமிழக போக்குவரத்து துறை அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதையொட்டியே, பேருந்து ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும், போக்குவரத்து துறை அவ்வப்போது அறிவுரைகளை வழங்கி வருகிறது.

குறிப்பாக, வாகனங்களை ஓட்டும் போது செல்போன் பேச கூடாது, மது அருந்த கூடாது, பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும், மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும், அரசு பேருந்துகளில் பயணிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் தேவைப்பட்டால் மனிதாபிமான முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் கண்ணியத்துடன் நடத்த வேண்டும்,

அவமதிக்கக் கூடாது, மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையில் தேவை நேரும்போது அமர்ந்து பயணிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும், அரசு பேருந்து ஓட்டுநர்கள் சிலர் பேருந்து இயக்கும் போது செல்போனில் பேசுவதாக பல குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ள நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து இயக்கும் போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று ஏற்கனவே போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது அதனை மீண்டும் உறுதி செய்யும் வகையில், அரசு பேருந்துகளை இயக்கும் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

* வாகனங்களை ஓட்டும்போது செல்போன் பேசக் கூடாது, மது அருந்தக் கூடாது, பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

* அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து இயக்கும் போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

* இந்நிலையில், தற்போது அதனை மீண்டும் உறுதி செய்யும் வகையில், அரசு பேருந்துகளை இயக்கும் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பேசினால் 29 நாட்கள் சஸ்பெண்ட்: தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,Salem ,Goa ,Madurai ,Dinakaran ,
× RELATED வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு...