×

அமெரிக்க அதிபர் அதிகாரத்தின் மூலம் 37 பேரின் மரண தண்டனையை ஆயுளாக குறைத்தார் பைடன்: விடைபெறும் முன்பாக மன்னிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து வெளியேறும் முன்பாக 40ல் 37 கைதிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து ஜோ பைடன் மன்னிப்பு வழங்கி உள்ளார். அமெரிக்காவில் அதிபர் பதவியில் இருந்து விடைபெறுபவர்கள் தங்களின் சிறப்பு அதிகாரம் மூலம் கடைசி நேரத்தில் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவது வழக்கம். அந்த வகையில், விரைவில் விடைபெற உள்ள அதிபர் ஜோ பைடன் 37 கைதிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து மன்னிப்பு வழங்கி உள்ளார்.

இவர்களில் பலரும் கொடூரமாக கொலை குற்றங்கள் செய்தவர்கள். போலீசார், பொதுமக்களை கொன்றவர்கள். போதை பொருள் கடத்தல்காரர்களும் ஆவர். ஆனால் அடுத்த அதிபராக வரும் ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், இந்த விஷயத்தில் மிகவும் கறாரானவர். அவரது முதல் ஆட்சியில் 13 பேரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் 17 ஆண்டில் எந்த அதிபரும் இவ்வளவு அதிகமான மரண தண்டனைகளை நிறைவேற்றியதில்லை. குறிப்பாக, போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை மன்னிக்காதவர் டிரம்ப்.

The post அமெரிக்க அதிபர் அதிகாரத்தின் மூலம் 37 பேரின் மரண தண்டனையை ஆயுளாக குறைத்தார் பைடன்: விடைபெறும் முன்பாக மன்னிப்பு appeared first on Dinakaran.

Tags : US President Biden ,Washington ,US President ,Joe Biden ,United States ,Pardon ,
× RELATED அரசியலில் திடீர் ஆர்வம்: அமெரிக்க...