×

தேசிய மனித உரிமைகள் ஆணைய புதிய தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியன் நியமனம்

புதுடெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக இருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் கடந்த ஜூன் 1ம் தேதி முடிந்தது. இதைத்தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவி காலியாக இருந்தது. கடந்த டிசம்பர் 18 அன்று, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் கார்கே, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்ற உயர் அதிகாரக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் தமிழ்நாட்டை சேர்ந்தவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான வி.ராமசுப்ரமணியன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி மாளிவை பிறப்பித்துள்ளது. மேலும் பிரியங்க் கனூங்கோ, நீதிபதி பித்யுத் ரஞ்சன் சாரங்கி (ஓய்வு.) உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post தேசிய மனித உரிமைகள் ஆணைய புதிய தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியன் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Former ,Supreme Court ,Justice V. Ramasubramanian ,National Human Rights Commission ,New Delhi ,Justice ,Arun Kumar Mishra ,Dinakaran ,
× RELATED மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமனமா?...