- பெண்கள்
- நியூசிலாந்து
- ஆஸ்திரேலிய வீரர்களான
- வெலிங்டன்
- பெண்கள் அணி
- நியூசிலாந்து
- டக்வொர்த் லூயிஸ்
- தின மலர்
வெலிங்டன்: நியூசிலாந்து சென்ற ஆஸ்திரேலியா பெண்கள் அணி, வெலிங்டன்னில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் ஆட்டம் மழை காரணமாக டாஸ் போடாமலேயே கைவிடப்பட்டது. தொடர்ந்து நடந்த 2வது ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. அதனால் டக்வொர்த் லீவிஸ் முறையில் ஆஸி அணி 65ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அதனால் ஆஸி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் கடைசி மற்றும் 3வது ஒருநாள் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் களம் கண்ட ஆஸியின் வீராங்கனைகள் கேப்டன் அலிஷா ஹீலி 39, லிட்ச்ஃபீல்டு 50, அன்னாபெல் 42, ஆஷ்லி 74ரன் விளாசினர்.
அதே நேரத்தில் விக்கெட்களும் வரிசைக் கட்ட ஆஸி 49வது ஓவரில் 290ரன்னுக்கு ஆட்டமிழந்தது. நியசி வீராங்கனைகள் அமிலியா கெர் 4, ரோஸ்மேரி 3, கேப்டன் ஷோபி டிவைன் தலா 2 விக்கெட் அள்ளினர். அதனையடுத்து 291ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசி விளையாடியது. சூசி பேட்ஸ் 53, பெல்லா ஜேம்ஸ் 24, அமிலியா 22, ஷோபி 25, புரூக் ஹாலிடே 27ரன் விளாசியதால் ஸ்கோர் உயர்ந்தாலும் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்தன. அதன் பிறகு வந்தவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற நியூசி 43.3ஓவரில் 215ரன்னுக்கு சுருண்டது.
அதனால் ஆஸி 215ரன் வித்தியாசத்தில் 2வது வெற்றியை சுவைத்தது. நியூசி வீராங்கனை மேடி கிரீன் 39ன்னுடன் கடைசி வரை களத்தில் நின்றார். ஆஸி வீராங்கனைகள் அன்னாபெல், ஆலனா கிங் தலா 3விக்கெட் சுருட்டினர். இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆஸி வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் இந்த ஆட்டம் மற்றும் தொடரின் சிறந்த வீராங்கனைகயாக தேர்வு செய்யப்பட்டார். ஐசிசி ஒருநாள் பெண்கள் உலக கோப்பை போட்டிக்கான இந்த தகுதிச் சுற்று ஆட்டத்தின் மூலம் புள்ளிப் பட்டியலில் ஆஸி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து, இந்தியா அணிகள் முறையே 2, 3வது இடங்களில் இருக்கின்றன.
The post நியூசிக்கு எதிரான பெண்கள் கிரிக்கெட்: தொடரை வென்றது ஆஸி appeared first on Dinakaran.