- கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- கொளத்தூர்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கொளத்தூர், சென்னை
- இந்து சமய அறநிலையத்துறை
- இந்து சமய அறநிலையத்துறை…
சென்னை: சென்னை கொளத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத் துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் சார்பில் 25 பள்ளிகளும், 10 கல்லூரிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் 22,249 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் சார்பில் கொளத்தூர், திருச்செங்கோடு, விளாத்திக்குளம், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் 4 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டதோடு, கொளத்தூர் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பல்கலைக்கழக விதிமுறைகளின்படி, உதவிப் பேராசிரியர்கள், நூலகர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மாதம் கொளத்தூர் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கி வைத்து, அக்கல்லூரியில் பயிலும் 240 மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் ரூ.10,000/- மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை வழங்கினார். இக்கல்லூரியில் பி.காம், பிபிஏ, பிசிஏ, பிஎஸ்சி ஆகிய பட்டப்படிப்புகளும், சைவ சித்தாந்தம் பட்டயப்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 2022ம் ஆண்டில் 480 மாணவ, மாணவியருக்கும், 2023ம் ஆண்டில் 685 மாணவ, மாணவியருக்கும், 2024ம் ஆண்டில் 748 மாணவ, மாணவியருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கல்விக் கட்டணம் ரூ.10,000 மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை வழங்கினார்.
தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு கொளத்தூரில் சோமநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு நில மாற்றம் செய்யப்பட்ட இடம், என மொத்தம் 5.96 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கல்லூரி கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
The post கொளத்தூர் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.