மயிலாடுதுறை: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 10க்கும் அதிகமான இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்ததுடன், அப்போது எடுத்த ஆபாச ேபாட்டோக்கள், வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததுடன், பணம், நகைகளை பறித்த காமக்கொடூரனை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாவடுதுறை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அப்துல்அஜீஸ் மகன் ஜாகிர் ஹூசைன்(23). இவருக்கு மயிலாடுதுறையை சேர்ந்த 29 வயதான சென்னையில் வேலை பார்க்கும் பிஇ பட்டதாரி இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
இது பின்னர் காதலானது. ஜாகிர் ஹூசைன் அந்த பெண்ைண திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவரிடமிருந்து 14 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கத்தை பறித்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதோடு, அதை தனது செல்போனில் வீடியோ, போட்டோ எடுத்து வைத்துக்கொண்டார். இருவரும் நெருக்கமாக இருக்கும் ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என ஜாகிர் ஹூசைன் மிரட்டி, அந்த இளம்பெண்ணை பலமுறை பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இதனால், அந்தப் பெண் கர்ப்பமடைந்தார்.
இதுதெரிந்த ஜாஹூர் உசேன் மற்றும் அவரது குடும்பத்தினர் இளம்ெபண்ணை வீட்டுக்கு வரவழைத்து அந்தப் பெண்ணுக்கு கட்டாய கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் நேற்று மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இளம்ெபண்ணின் மீதே குற்றம்சாட்டி பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று இளம்பெண்ணுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் திரண்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் டிஎஸ்பி பாலாஜி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவது, பாலியல் துன்புறுத்துதல், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து ஜாகிர் ஹூசைனை கைது போலீசார் மயிலாடுதுறை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இதேபோல் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் ஜாகிர் ஹூசைனால் பாதிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த மற்றொரு இளம்பெண், செல்போன் மூலம் மயிலாடுதுறை போலீசில், தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி பேசி அந்த வீடியோவை ேபாலீசுக்கு அனுப்பி புகார் அளித்தார்.
ஜாகிர் ஹூசைன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். இதேபோல் ஜாகிர்ஹூசைனால் 10க்கும் அதிகமான பெண்கள் புகார் அளித்து வருவதாக கூறப்படுகிறது. ஜாகீர் ஹூசைன் திருமணமான இளம்பெண்களையும் வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்துவிட்டு அந்த ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம், நகைகளை பறித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
The post திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 10 பெண்களை பலாத்காரம் செய்து மிரட்டி பணம் பறித்த காமக்கொடூரன் கைது appeared first on Dinakaran.