×

ராயக்கோட்டையில் வேளாண் கருவிகள் தயாரிப்பில் வடமாநில தொழிலாளர்கள் தீவிரம்

ராயக்கோட்டை : ராயக்கோட்டை பகுதியில், சாலையோரத்தில் தங்கி வடமாநில தொழிலாளர்கள் வேளாண் கருவிகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.

அவற்றை விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஏரி, குளம், குட்டை, கிணறு, போர்வெல்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் தரிசாக போட்டிருந்த நிலங்களிலும், விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலத்தில் வளர்ந்துள்ள செடிகளை வெட்டி அகற்றுதல், நிலத்தை சமன்படுத்துதல், முட்புதர்களை அகற்றுதல், நிலத்திற்கு தழை சத்து அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையொட்டி, ராயக்கோட்டையில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் முகாமிட்டு, சாலையோரத்தில் கூடாரம் அமைத்து மண்வெட்டி, அரிவாள், கடப்பாரை, கதிர் அரிவாள், கோடாலி உள்ளிட்ட இரும்பிலான விவசாய கருவிகளை, இரும்பை உருக்கி புதிதாக தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். அவற்றை விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

இது குறித்து வட மாநில தொழிலாளர்கள் கூறுகையில், ‘தமிழகத்தில் இந்த மாதங்களில் மழை பெய்யும் என்பதால், விவசாயத்திற்கு பயன்படும் உழவு கருவிகளை செய்து கொடுப்பதற்காக, குடும்பத்துடன் பிழைப்பு தேடி வந்துள்ளோம்.

எங்களிடம் ரூ.100 முதல் ரூ.500 வரையிலான விவசாய உபகரணங்கள் கிடைக்கும். கிராமங்கள் தோறும் சென்று வேளாண்மை கருவிகளை செய்து, விற்பனை செய்து வருகிறோம்,’ என்றனர்.

The post ராயக்கோட்டையில் வேளாண் கருவிகள் தயாரிப்பில் வடமாநில தொழிலாளர்கள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Rayakottai ,Tamil Nadu ,
× RELATED கமலா ஆரஞ்சு வரத்து அதிகரிப்பு