×

தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி : உண்மை சரிபார்ப்பகம்

சென்னை : தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறாத நிலை உருவாகி உள்ளதாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் பதிவை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது. 2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி அடுத்த 2026 ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும். ஆனால், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகிறது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி : உண்மை சரிபார்ப்பகம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Eadapadi Palanisami ,Government of Tamil Nadu ,H.E. ,Secretary General ,Palanisami ,
× RELATED தமிழ்நாடு அலங்கார ஊர்தி தொடர்பாக...