சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் வெங்காயம், தக்காளி, பூண்டு விலை குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரையும், தக்காளி ரூ.30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. மொத்த வியாபாரத்தில் வெங்காயம் கிலோ ரூ.50க்கும், தக்காளி ரூ.20க்கும், பூண்டு ரூ.350க்கும் விற்பனையாகின்றன. பூண்டு விலை ரூ.50 வரை குறைந்துள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், சில்லறை விலையில் கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது.
The post சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் வெங்காயம், தக்காளி, பூண்டு விலை குறைவு! appeared first on Dinakaran.