- சென்னை
- தமிழ்நாடு அரசு
- ஆசிரியர் தேர்வு வாரியம்
- நோடல் ஏஜென்சி
- சென்டர்
- உயர்
- ஊராட்சி, ஊராட்சி
- கோபால்
- தின மலர்
சென்னை: உயர்கல்வித் துறையின் மாநிலத் தகுதித் தேர்வை (செட்) நடத்துவதற்கான ‘‘நோடல் ஏஜென்சியாக’’ (ஒருங்கிணைப்பு மையம்) ஆசிரியர் தேர்வு வாரியத்தை தமிழக அரசு நியமித்துள்ளது. இதுகுறித்து அரசு கூடுதல் முதன்மைச் செயலாளர் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணை: உயர் கல்வித்துறையின் சார்பில் கடந்த 2.9.2023ம் தேதியிட்ட அரசாணையில் 2023-2024ம் ஆண்டுக்கான மாநில தகுதித் தேர்வு (செட்) நடத்துவதற்கான நோடல் ஏஜென்சியாக, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தை தமிழக அரசு நியமித்தது. இருப்பினும், மேலே குறிப்பிட்ட காலத்தில் மாநிலத் தகுதித் தேர்வை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் நடத்தவில்லை.
இதையடுத்து, அரசு கவனமாக பரிசீலனை நடத்தி, 2024-2025 முதல் 2026-2027ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளுக்கு மேற்கண்ட மாநில தகுதித்தேர்வை நடத்தவேண்டியுள்ளதால், புதுடெல்லியில் உள்ள பல்கலைக் கழக மானியக் குழுவால் உருவாக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி மாநில தகுதித் தேர்வை நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தை (டிஆர்பி) நோடல் ஏஜென்சியாக தமிழ்நாடு அரசு பரிந்துரைக்கு முடிவு செய்து அதன்படி அரசாணை பிறப்பித்துள்ளது. இவ்வாறு உயர்கல்வித்துறை அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அரசாணை வெளியீடு செட் தேர்வு நடத்த டிஆர்பி-க்கு அனுமதி appeared first on Dinakaran.