×

டெல்லியில் வங்கதேசத்தினர் 175 பேர் சிக்கினர்

புதுடெல்லி: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலரும் பிழைப்பு தேடி இந்தியாவுக்கு உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். இதுதொடர்பாக டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவின்படி, டெல்லி காவல்துறை வீடு, வீடாக சென்று அதிரடி சோதனை நடத்தியது.

இந்த 12 மணி நேர சோதனையில் உரிய ஆவணங்களின்றி வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய 175 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post டெல்லியில் வங்கதேசத்தினர் 175 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Delhi ,NEW DELHI ,Sheikh Hasina ,Bangladesh ,India ,Delhi Governor V. K. ,Saksena ,Delhi Police ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...