×

கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு குப்பை சேகரிக்கும் எலக்ட்ரிக் வாகனம் வழங்கல்

 

நாகப்பட்டினம்,டிச.21: கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ்ஆல்வாஎடிசன் வாகனங்களை வழங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாத்திமாமேரி தலைமை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார் வேளாங்கண்ணி பேரூராட்சி திமுக செயலாளர் மரியசார்லஸ், ஒன்றிய குழு தலைவர் செல்வராணிஞானசேகரன், துணை தலைவர் சௌரிராஜன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு குப்பை சேகரிக்கும் எலக்ட்ரிக் வாகனம் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Keezhayur Panchayat Union ,Nagapattinam ,Keezhayur Union ,Swachh Bharat Movement ,Keezhayur East Union ,DMK ,Thomas Alva Edison ,Dinakaran ,
× RELATED விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடித்து அகற்ற வேண்டும்