கருங்கல், டிச.21: கீழ்குளம் பேரூராட்சியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது பேரூராட்சியில் பணியாற்றும் அனைத்து தூய்மை பணியாளர்கள் மற்றும் மசூர் பணியாளர்களுக்கு கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால் கேக் மற்றும் புத்தாடை வழங்கி அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ரகுநாதன்,பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கிருஷ்ணன், லாசர், எமில் ஜெபசிங்,ஜான் சமுத்திரபாண்டி, அல்போன்சாள் அனிதா,மார்கிரட் மேரி ஜாஸ்பின், சுகந்தி மல்லிகா ஷோபா, சுகறா பிபி, திமுக கிள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், பேரூர் செயலாளர் எஸ்.எம். கான் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், மசூர் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post கீழ்குளம் பேரூராட்சியில் கிறிஸ்துமஸ் விழா appeared first on Dinakaran.