கரூர், டிச. 21: 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. ஓட்டுநர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 162.5 செ மீ குறையாமல் இருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும். இலகு ரக வாகன உரிமம் எடுத்து குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து 1 ஆணடு நிறைவு பெற்றிருக்க வேண்டும். 24 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மருத்துவ உதவியாளர், பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (12ம் வகுப்பிற்கு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ் கிராஜூவேட் அதாவது பிஎஸ்சி விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஷ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி. 19 வயது முதல் 30க்குள் இருக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பத்தாரர்கள், கல்வி, ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபார்ப்பதற்காக டிசம்பர் 21ம்தேதி கரூரில் உள்ள பழைய அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும்.
The post 108 ஆம்புலன்ஸ் சேவை ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.