×

இந்துக்கள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை வங்கதேசத்தில் 2200 வழக்குகள் பதிவு

புதுடெல்லி: ஒன்றிய வெளியுறவு துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலமாக அளித்த பதிலில், ‘‘சிறுபான்மை மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் தரவுகளின் அடிப்படையில் வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக 2200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை வழக்குகளின் எண்ணிக்கையானது 112 ஆக இருந்தது.

2022ம் ஆண்டு புள்ளிவிவரங்களில் வங்கதேசத்தில் 47 மற்றும் பாகிஸ்தானில் 241 வன்முறை வழக்குகள் பதிவாகி இருந்தது. 2023ம் ஆண்டு வங்கதேசத்தில் இந்த வழக்குகளில் எண்ணிக்கை 302 ஆகவும், பாகிஸ்தானில் 103 ஆகவும் இருந்தது. மத சகிப்புத்தன்மையின்மை, மதவெறி வன்முறை, சிறுபான்மை சமூகங்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் தாக்குதல்களை தடுப்பதற்கும், இந்துக்கள், சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது ” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்தியா கண்டனம்
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை ராஜினாமா செய்ய வைத்த எழுச்சியை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்று வங்கதேச இடைக்கால அரசின் முக்கிய நபரான மஹ்புப் ஆலம் பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். இது தற்போது நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் வங்கதேச தரப்பில் எங்களது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். குறிப்பிட்ட பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக நாங்கள் புரிந்து கொள்கிறோம். சம்பந்தப்பட்ட அனைவரும் பொதுக்கருத்துக்களை கவனத்தில் கொள்ளுமாறு நினைவூட்டுகிறோம்” என்றார்.

The post இந்துக்கள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை வங்கதேசத்தில் 2200 வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,New Delhi ,Union Minister of State for External Affairs ,Kirti Vardhan Singh ,Bangladesh… ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்தில் இந்து கோயில் நிர்வாகி அடித்துக் கொலை