×

புதுச்சேரியில் இருந்து 8 மாதங்களுக்கு பிறகு ஐதராபாத், பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை: கவர்னர், முதல்வர் தொடங்கி வைத்தனர்

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் மூலம் விமானம் இயக்கப்பட்டு வந்தது. போதிய பயணிகள் இல்லாததால் கடந்த மார்ச் 30ம் தேதியுடன் விமான சேவை நிறுத்தப்பட்டது. 8 மாதங்களுக்கு பிறகு நேற்று காலை 11.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து 78 இருக்கைகள் கொண்ட இண்டிகோ சிறிய ரக விமானம், 74 பயணிகளுடன் மதியம் 12.25 மணிக்கு புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்தடைந்தது. மதியம் 12.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து 63 பயணிகளுடன் ஐதராபாத்துக்கு விமானம் புறப்பட்டது.

இந்த விமான சேவையை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அமைச்சர் சாய் ஜெ.சரவணகுமார், தலைமை செயலர் சரத் சவுகான், கவர்னரின் செயலர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தினமும் பெங்களூருவில் இருந்து காலை 11.10 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 12.25 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். பின்னர், மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். அதேபோல், ஐதராபாத்திலிருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்படும் விமானம் புதுச்சேரிக்கு மாலை 4.30 மணிக்கு வந்தடையும். பின்னர் மாலை 5.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.35 பெங்களூரு சென்றடையும்.

The post புதுச்சேரியில் இருந்து 8 மாதங்களுக்கு பிறகு ஐதராபாத், பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை: கவர்னர், முதல்வர் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Hyderabad, Bangalore ,Governor ,Chief Minister ,SpiceJet ,Laspettai airport ,Bangalore ,Hyderabad ,Hyderabad, ,
× RELATED புதுச்சேரியில் 8 மாதங்களுக்கு பிறகு...