×

வெ.இண்டீசுக்கு எதிரான 3வது டி.20 போட்டியில் வெற்றி; ரிச்சா அதிரடியாக பேட்டிங் செய்வதை விரும்பினோம்: கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டி


மும்பை: வெஸ்ட்இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டி கொண்ட டி.20 தொடரில் முதல் போட்யில் இந்தியாவும், 2வது போட்டியில் வெஸ்ட்இண்டீசும் வெற்றிபெற்ற நிலையில், 3வது மற்றும் கடைசி போட்டி நேற்றிரவு மும்பை டி.ஒய். பாட்டில் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்மிதி மந்தனா 77, ரிச்சா கோஷ் 54, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 39,ராகவி பிஸ்ட் 31 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களே எடுத்தது. இதனால் 60 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று 2-1 என தொடரையும் கைப்பற்றியது.

ரிச்சா கோஷ் ஆட்டநாயகி விருதும், 3 போட்டியில் 193 ரன் எடுத்த மந்தனா தொடர் நாயகி விருதும் பெற்றார். அவர் கூறியதாவது: 2வது போட்டியில் தோல்விக்கு பின் கடந்த 5 ஆண்டுகளாக டி 20 தொடரை வெல்லவில்லை என்று சக வீராங்கனைகளிடம் சொன்னேன். அந்த உத்வேகத்தில் இன்று வெற்றி பெற்றுள்ளோம். மேலும் நாங்கள் சரியான பேட்டிங் லைன்-அப்பில் புதிய வீராங்கனைகள் வந்தனர். இதனால் எனக்கு கொஞ்சம் கூடுதல் பொறுப்பு இருந்தது. ரிச்சா அதிரடியாக பேட்டிங் செய்யும் விதத்தை விரும்பினோம். மிடில் ஆர்டரில் ஹர்மன் தூணாக இருந்துள்ளார். அவர் இருக்கும் போதெல்லாம், ரிச்சா சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

கடந்த போட்டியிலும் ரிச்சாவின் இன்னிங்ஸ் ஆச்சரியமாக இருந்தது, ஆனால் தோல்வியால் துரதிர்ஷ்டவசமாக அதைப் பாராட்ட முடியவில்லை, என்றார். அடுத்ததாக 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரின் முதல்போட்டி வரும் 22ம் தேதி வதோதராவில் நடக்கிறது.

The post வெ.இண்டீசுக்கு எதிரான 3வது டி.20 போட்டியில் வெற்றி; ரிச்சா அதிரடியாக பேட்டிங் செய்வதை விரும்பினோம்: கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டி appeared first on Dinakaran.

Tags : T20 ,Indies ,Richa ,Smriti Mandana ,Mumbai ,West Indies ,India ,Dinakaran ,
× RELATED ஐசிசி டி20 மற்றும் ஒருநாள்...