- சி.எம்.டி.ஏ
- படைப்பு மையம்
- சென்னை
- அமைச்சர்
- சேகர்பாபு
- முதலமைச்சரின் படைப்பு மையம்
- சென்னை,
- எக்மோர், சென்னை
- தாளமுத்து நடராசன் மாளிகை
- சென்னை பெருநகர மேம்பாட்டுக் குழு
- சேகர்பாபு…
- தின மலர்
சென்னை: சிஎம்டிஏ சார்பில் பல்வேறு நூலகங்களை மேம்படுத்தி முதல்வர் படைப்பகம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆய்வுக் கூட்டம் நடத்தினார். சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு தலைமையில் 2024-2025ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ சார்பில் பல்வேறு நூலகங்களை மேம்படுத்தி முதல்வர் படைப்பகம் (பகிர்ந்த பணியிடம் மற்றும் கல்வி மையம்) அமைப்பது தொடர்பாகவும், சாலை சந்திப்பு மேம்பாடுகள் மற்றும் சுரங்க பாதைகளை அழகுபடுத்துதல் தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு முன்னர் அமைச்சர் சேகர்பாபு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சாதனைகள் அடங்கிய காபி டேபிள் புத்தகத்தை வெளியிட்டார். இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் ருத்ரமூர்த்தி, பாலசுப்ரமணியன், ரவிக்குமார், கண்காணிப்பு பொறியாளர் பாலமுருகன், முதுநிலை திட்ட அமைப்பாளர் அனுஷியா, செயற்பொறியாளர் விஜயகுமாரி, சென்னை மாவட்ட நூலக அலுவலர் கவிதா, திட்ட ஆலோசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post சி.எம்.டி.ஏ. சார்பில் பல்வேறு நூலகங்களை மேம்படுத்தி முதல்வர் படைப்பகம் அமைக்க ஏற்பாடு appeared first on Dinakaran.