சிவகாசி, டிச.20: சிவகாசி மாநகராட்சிக்கு உள்பட்ட வார்டுகளில் அசோகன் எம்எல்ஏ நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சிவகாசி மாநகராட்சியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை அசோகன் எம்எல்ஏ அவ்வப்போது ஆய்வு செய்த வருகின்றார். இந்த நிலையில் மாநகராட்சியில் 31வது வார்டு பகுதியில் அசோகன் எம்எல்ஏ நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாக்கடை கால்வாய் வசதி, மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். சாக்கடை கால்வாயை சீரமைத்து தருமாறும், மின் விளக்குகள் அமைத்து தருமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை நிறைவேற்றுவதாக எம்எல்ஏ உறுதி அளித்தார். இந்த ஆய்வின் போது, காங்கிரஸ் கவுன்சிலர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
The post சிவகாசி மாநகராட்சி வார்டுகளில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.