பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 20: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பயன்பாட்டில் உள்ள கேண்டீன் ஒப்பந்த காலம், முடிவடைந்த நிலையில், வரும் 1.1.2025 முதல் 31.12.2025 வரை ஒப்பந்த அடிப்படையில் கேன்டின் நடத்த விருப்பமுள்ள நிறுவனம் அல்லது மகளிர் சுயஉதவி குழுவினரிடம் இருந்து விலை புள்ளிகள் வரவேற்கப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிற்றுண்டி சாலை கேன்டீன் நடத்துவதற்கு உரிய விண்ணப்ப படிவம், பொருட்களின் பெயர் பட்டியல், விவரம் மற்றும் நிபந்தனைகள் ஆகிய வற்றை கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளவும். மூடி முத்திரையிட்ட உரையுடன் கூடிய விலை புள்ளிகள் வருகிற 26ம்தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரி அலுவலகத்தில் வழங்க வேண்டும் என கல்லூரி நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
The post கேண்டீன் நடத்த மகளிர் குழுவினருக்கு அழைப்பு appeared first on Dinakaran.