×

மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பாதுகாவலர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, ஜன. 20: மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்கு மருத்துவ உதவி, சட்ட உதன் கீழ்வி, தங்கும் உதவி மற்றும் மன நல ஆலோசனை வழங்குவதற்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ எனும் மையம் செயல்பட்டு வருகிறது.

இதில் மாதம் ரூ.12 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பாதுகாவலர் பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். 10ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2ஆண்டு பாதுகாவலர் பணி அனுபவம் இருத்தல் வேண்டும். விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மாவட்ட சமூக நல அலுவலர், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கை-630561 என்ற முகவரிக்கு டிச.24 மாலை 5 மணிக்குள் கிடைக்கும் படி அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பாதுகாவலர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : District Social Welfare Office ,Sivaganga ,Sivaganga District Social Welfare Office ,
× RELATED பண்ணைக்குட்டைகள் அமைக்க வலியுறுத்தல்